Saturday, October 11, 2014

மிளகு மருத்துவம்:-



மிளகு மருத்துவம்:-
சளி பிடித்திருந்தால் மிளகை எடுத்து ஊசி முனையில் குத்தி தீயில் வாட்டினால் அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தால் சளியும், மூக்கடைப்பும் சரியாகும். பக்கவாதமென்னும் பெராலிசிசஸ்யை குணப்படுத்த 50 கிராம் மிளகை தூள் செய்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அதை பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மீது தினமும் இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் விரைவில் குணமடையும். ஒவ்வாமை என்னும் அலர்ஜியா? ஒத்துவராத உணவால் ஒவ்வாமை ஏற்பட்டால் கொஞ்சம் மிளகுத் தூளை ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் பகுதியாக வற்றும்படி காய்ச்சிக் குடித்தால் உஷ்ணம், அஜீரணம், பேதி, தொண்டைக்கம்மல், சாதா காய்ச்சல் போன்றவற்றிற்கு இந்நீர் மிகவும் உதவும். மிளகுத்தூளை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்தால் தலைவலி நீங்கும். ஒரு தேக்கரண்டி அளவு மிளகும், அதே அளவு சர்க்கரையும் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைக்கவும். வலி குறையும் வரை வைத்தால் விரைவில் பல்வலி குணமாகும்.

எளிய இயற்கை வைத்தியம்:-

* கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்­ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
* பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
* சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
* காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
* வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

பாட்டி வைத்தியம் :-

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.
குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.
2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.
3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.
5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.
7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.
8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.
9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

அன்னாச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்:-

அன்னாச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்:-
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே

ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை இழப்பை தடுக்கும் பழங்கள் :-

பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டால், அது அவர்களது ஈகோவை பாதிக்கும்.
எனவே ஆண்கள் எப்போதும் வலுவுடனும், ஆரோக்கியமான ஆண்மைத்தன்மையுடனும் இருக்க விரும்புவார்கள். ஆனால் அப்படி நினைத்தால் மட்டும் போதாது, ஆண்மை இழப்பு ஏற்படாதவாறு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்
குறிப்பாக ஆண்களுக்கு இப்படி ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறை தான். இதனால் மன அழுத்தம் அதிகரித்து, நிம்மதி போய், எதிலும் அவசரமாக இருப்பதால், உடலை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க முடியவில்லை.
ஆகவே எப்போதும் ஆண்மை இழப்பு ஏற்படாமல் இருக்க, உண்ணும் உணவில் ஒருசில பழங்களை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இங்கு ஆண்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களை சாப்பிட்டால், விறைப்புத்தன்மை குறைபாடு, ஆண்மை இழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
கிரேப் ஃபுரூட் :-
இந்த பழத்தில் லைகோபைன் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதை தடுக்க வல்லது.
அன்னாசி :-
அன்னாசிப்பழம் ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், அது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும். மேலும் இதில் மெக்னீசியம் இருப்பதால், இது நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட உதவியாக இருக்கும்.
தர்பூசணி :-
தர்பூசணி ஒரு வயாகரா. ஆகவே இந்த பழத்தை ஆண்கள் சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளானது ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, அவர்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படாமல் தடுக்கும்.
கொய்யாப்பழம் :-
கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இதுவும் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்க வல்லது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், அவர்களுக்கு ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.
வாழைப்பழம் :-
வாழைப்பழத்தில் இயற்கையாகவே விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுக்கும் பொருள் உள்ளது. ஆகவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவது, ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையையும் விளைவிக்காமல் இருக்கும்.
ஸ்ட்ராபெர்ரி :-
ஸ்ட்ராபெர்ரியும் ஒரு இயற்கை வயாகரா. அதிலும் இந்த இயற்கை வயாகராவை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிக்கும். அதிலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் 1 மணிநேரத்திற்கு முன், இதனை சாப்பிட்டால், நன்கு செயல்பட முடியும்.
கோஜி பெர்ரி :-
பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் கோஜி பெர்ரி. இந்த பழத்தில் மற்ற பழங்களை விட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் உள்ளது. இதனால் இது ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்களில் மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது.
கிவி :-
கிவி பழத்தில் அர்ஜினைன் என்னும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அமினோ ஆசிட் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஆண்குறிக்கு இரத்தம் செல்வதை அதிகரிக்கும்.

இருமலுக்கு கை கண்ட மருந்து சிற்றரத்தை :-


வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பிஅனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.
சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.
சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.
பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.

பலாபழத்தில் உள்ள சத்துக்கள்:-



பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.
மேல் தோலை மிருதுவாக செய்யும், பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலாபழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

காய்கறிகளும் அதன் பயன்களும் !!!

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.
4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள்  நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை மண்ணில் புல் வெளிகளிலும், நிலங்களிலும் படர்ந்து வளரும் கொடி இனத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உண்டு. பொதுவாக மூக்கிரட்டையானது அது சிறிய சற்று வட்டமான இலைகளையும் சிவந்த பூக்களையும் கொண்டு தரையில் படரும் பூண்டு வகை ஆகும்.
இதைப் போலவே உருவம் கொண்டு சற்று பெரிய இலைகளையும் தடுமனான, வட்டமான வடிவத்தையும் வெண்மையான பூக்களையும் கொண்டு, காம்புகள் சற்று பருமனாகவும் கொண்டு விளங்குவது. ஆயுர்வேத நூல்களின்படி மூக்கிரட்டை என்பது உஷ்ணத்தை தருகிற ஒரு மூலிகை ஆகும்.
சிறிது கசப்பும் வறட்டுத் தன்மையும் வாய்ந்தது. இது கபத்தை அழிக்க கூடியது. இரண்டு திசுக்களின் இடையே உள்ள தடையை அல்லது அடைப்பை போக்க வல்லது. இத்தன்மையால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், வலி ஆகியவற்றுடன் ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களையும் குணப்படுத்த கூடியது.
மேலும் உடல் வலியையும் போக்கக்கூடியது மூக்கிரட்டை ஆகும். மூக்கிரட்டையின் வேரும் மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். வேரைச் சேகரித்து சுத்தப்படுத்தி பொடித்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மூக்கிரட்டை நீண்ட ஆயுளைத் தருகிற கற்ப மூலிகையாகவும் மதிக்கப்படுகிறது.
இது கண்களின் பார்க்கும் திறனை அதிகப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் தேங்கும் "பொட்டாசியம்'' என்னும் உப்பின் அளவைக் குறைக்கவல்லது. தொழுநோய், பெருநோய் என்று சொல்லப்படுகிற குட்ட நோயையும் போக்கக் கூடியது.
மூக்கிரட்டைக் கீரையில் பல வகையான ரசாயன வேதிப்பொருள்கள் உள்ளன இவை இனப்பெருக்க உறுப்புகள், சீரண உறுப்புகள் , சுவாச உறுப்புகள், சிறுநீரகம் , ஈரல் மற்றும் அது தொடர்பான மஞ்சள் காமாலை, இதயம் மற்றும் இதய நாளங்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு மருந்தாகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் மூக்கிரட்டைக் கீரையில் சத்து பொருள்களான 15 விதமான அமினோ ஆஸிட்கள், வேரில் 14 அமினோ ஆசிட்கள், ஐஸோ பால்மிட்டேட் அஸிடேட், பெகனிக் ஆஸிட், அராசிடிக் ஆஸிட், நீர்மைப்பட்ட கொழுப்பு அமிலங்கள் விட்டமின் `சி' விட்டமின் பி3, மற்றும் விட்டமின் பி2 கால்சியம் சத்து அடங்கியுள்ளன.
மூக்கிரட்டைக் கீரை ஒரு ரசாயனத் தன்மை மிக்கது என்கிறது ஆயுர்வேதம். ரசாயனம் என்பது நீண்ட ஆயுளை அளிக்கவல்லது மட்டுமல்லாது இளமையை நீட்டிக்க வல்லது, மூளைக்கு புத்துணர்வையும் சுறு சுறுப்பையும் அளிக்க வல்லது. ஈரலை பலப்படுத்தவல்லது.
நோயைத் தடுக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இவை மட்டுமின்றி கீழ்வரும் நீண்ட பட்டியலை ஒரு முறைக்கு இருமுறை படித்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.
இவை அவசியமானவையும் அதிசயமானவையும் கூட. மூக்கிரட்டைக் கீரை காய்ச்சலை போக்கக் கூடியது, முதுமையை தவிக்கக் கூடியது, வலிப்பை போக்கக் கூடியது, எவ்வித வீக்கத்தையும் கரைக்க கூடியது , ஒட்டுண்ணிகளுக்கு எதிரானது, தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிரானது, ஆஸ்த்துமாவை போக்கக் கூடியது , வயிற்றுப் போக்கை தணிக்க வல்லது, கற்களை கரைக்க கூடியது ,
கடுப்பை குறைக்க வல்லது, குடற் புழுக்களை விரட்ட வல்லது, நுண்கிருமிகளுக்கு எதிரானது, உயர் ரத்த அழுத்தத்தைத் தணிக்க வல்லது, புண்களை ஆற்றக் கூடியது, ரத்தத்தைச் சுத்திகரிப்பது, குடல் வாயுவை போக்கக் கூடியது, சிறுநீரைப் பெருக்க வல்லது,
கல்லீரலை பாதுகாப்பது, இன உணர்வைத் தூண்டக் கூடியது, சுவாச நாளங்களைச் சுகப்படுத்தக் கூடியது, உடல் நச்சுக்களை முறிக்கவல்லது, சளி மற்றும் கோழையைக் கரைத்து வெளியேற்ற வல்லது, மலமிளக்க வல்லது, தேவையற்ற சுரப்பிகளை வற்றச் செய்வது,
இதயத்துக்கு பலம் அளிப்பது, செரிமானத்தை சீர்படுத்துவது, பாலைச் சுரக்க வைப்பது, புற்றுநோய் செல்களைத் தடுக்கக் கூடியது என ஒரு நீண்ட மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது.
மூக்கிரட்டைக்கீரை மாலைக் கண் என்னும் இரவில் கண் தெரியாமையை குணப்படுத்தக் கூடியது. மேலும் கண்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்க வல்லது. கண்களின் பார்க்கும் திறனை பலப்படுத்துவது அது மட்டுமின்றி பாம்புக்கடி விஷத்தை முறிக்கவும் வல்லது.