Friday, January 30, 2015

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இ...ல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Thursday, January 22, 2015

நெல்லி ஜாமூன்

நெல்லி ஜாமூன்
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 50,...
தேன் - ஒன்றரை கிலோ,
பனங்கற்கண்டு - அரை கிலோ.

செய்முறை:
நெல்லிக்காயை நன்கு கழுவவும். பிறகு, சுத்தமான ஊசியால்... ஒவ்வொரு நெல்லிகாய் முழுவதிலும் சிறு சிறு துளைகள் இடவும். கண்ணாடி பாட்டிலில் தேனை விட்டு, அதில் துளையிட்ட நெல்லிக்காய், பனங்கற்கண்டு போட்டு ஊற விடவும். கண்ணாடிப் பாட்டிலின் மேல் பகுதியில், மெல்லிய காட்டன் துணியைக் கட்டி.. வெயிலில் ஒரு வாரம் வரை வைத்தெடுத்தால், நெல்லி ஜாமூன் ரெடி!
குறிப்பு:
முதுமையை விரட்டும் அற்புத மருந்து இது. தினம் தவறாமல் சாப்பிட... உயர் ரத்த அழுத்தம், ஒபிஸிட்டி போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். சளி, இருமல், தலைவலி விலகும், கண்பார்வை மேம்படும்.

முடி பிரச்னையை தவிர்க்க -பாட்டிவைத்தியம் :-

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவத...ு நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

ஜலதோசம், மூக்கடைப்பு



ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . .
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோ...சம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.