Monday, March 31, 2014

தலை முடி நன்கு வளர..

தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை – 2 கப்
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

உடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.
நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.
மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.
அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.
இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.
கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.
இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

புற்றுநோய் கொல்லி “காட்டு ஆத்தாப்பழம்”..!

நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.
பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.
இலங்கை மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் "முள் ஆத்தன்காய்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.
இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
இலங்கை: “காட்டு ஆத்தா” (முள் ஆத்தன்காய்) (சில மாவட்டங்களில் “அன்னமுன்னா பழம்” அல்லது “அண்ணவண்ணா பழம்” என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: “Soursop”, “Prickly Custard Apple”, “Soursapi

உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை

இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.
பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.
சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம்.
கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.
நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

ஆரோக்கியதிர்க்கு உதவும் சோம்பு நீர்..!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

மரு" (Skin Tag) உதிர...

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...


அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இரத்தம் சுத்தமடைய:

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க:

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு : தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குருவை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம் 

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது.

பாதாம் பற்றி குறிப்பு ??

நல்லதா, கெட்டதா? சாப்பிடலாமா, கூடாதா எனக் குழம்ப வைக்கிற ஒரு சில உணவுகளில் பாதாமும் ஒன்று. உண்மைதான் என்ன?

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட்செய்கிறவர்களுக்கும, கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது.

100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம்.

‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்?

ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம்.

அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம். பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.

நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது.

அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு.

பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும். பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

வாழைப்பழ தோலின் வியக்க வைக்கும் 8 பயன்கள் !!

பிரச்சனைகளான பழுப்பு நிற
சருமம் மற்றும் கரும்புள்ளிகளில்
இருந்து விடைபெறலாம்.
பளபளக்கும் பற்களுக்கு
தினமும் வாழைப்பழத் தோலைக்
கொண்டு பற்களை ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும்.
இதனை ஒரு வாரம்
தொடர்ந்து செய்தால், மஞ்சள் பற்கள்
பளபளக்கும்.

தண்ணீரை சுத்தபடுத்த
குடிநீரை சுத்தம் செய்ய
இனி பியூரிபையர் போன்ற
பொருட்களை பயன்படுத்த
வேண்டியதில்லை. வாழைப்பழத்
தோல் இருந்தால் போதும்.
ஏனென்றால், குடிநீரில் உள்ள
நச்சுப்பொருட்களை அகற்றுவதில்
பியூரிபையரைவிட, வாழைப்பழ
தோல் சிறப்பாக செயல்படுவதாக
பிரேசில்
நாட்டு ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மரு நீங்க
தூங்கும் முன் மரு உள்ள இடங்களில்
வாழைப்பழத்
தோலை கொண்டு நன்றாக தேய்க்க
வேண்டும். அவ்வாறு செய்தால்
செய்தால் மரு மறைவதோடு,
புதிய மருவும் ஏற்படாது.
முக சுருக்கம் நீங்க
வாழைப்பழத் தோல்
சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க
வைக்கிறது. இதற்கு மசித்த
வாழைப்பழத் தோலில் முட்டையின்
மஞ்சள் கருவை சேர்த்துக்
கொள்ளுங்கள். இந்த
கலவையை முகத்தில்
தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற
வைக்கவும். பின் நீரில்
முகத்தை கழுவவும். இந்த
முறையை தொடர்ந்து செய்து வந்தால்
முக சுருக்கம் நீங்கும்.
புற ஊதா கதிர்களில்
இருந்து பாதுகாப்பு
வாழைப்பழத் தோல் கண்களை புற
ஊதா கதிர்களில்
இருந்து பாதுகாக்கும்.
அதற்கு அதை கண்களில் தடவும்
முன் சூரிய ஒளியில்
சிறிது நேரம் வைக்க வேண்டும்.
வலி நிவாரணி
வாழைப்பழத் தோலை உடலில்
வலி இருக்கும் இடத்தில் நேரடியாக
தடவும். வலி போகும்
வரை ஒரு அரை மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள்.
அதனுடன்
சேர்த்து காய்கறி எண்ணெயையும்
கலந்து கொண்டால், இன்னும்
சிறப்பாக செயல்படும்.
பூச்சிக் கடிகளுக்கு மருந்து
கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில்
வாழைப்பழத்
தோலை கொண்டு மசாஜ் செய்தால்,
உடனடி நிவாரணி கிடைக்கும்.
மேலும் அரிப்பும், வலியும்
உடனடியாக நீங்கும்.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

பனை

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாகபிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்

நண்பர்களே கவனியுங்கள் ! ! ! இது உண்மைச் சம்பவம் ! ! ! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள் ! ! ! தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள். 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் புண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும். நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். - ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ் தமிழாக்கம்

முடிக் கொட்டுவதால் ஏற்படும் வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு

ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை முடி கொட்டுவது. தற்போது பலருக்கும் இளம் வயதிலேயே முடி கொட்டி தலை வழுக்கை விழுந்துவிடுவதால் அதிக மன உளைச்சல் அடைகிறார்கள். இவ்வாறு கொட்டுகிறதே என கவலைபடுவதால் இன்னும் அதிகமாக கொட்டும்.

இதை சரி செய்வது எவ்வாறு என முயற்சி எடுப்பது நல்லது. மார்கெட்டில் விற்கும் பலவித எண்ணைகளையும். மூலிகை என்ற பெயரால் விற்கபடுவதையும் வாங்கி தேய்ப்பதை விட எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத சிறந்த தீர்வு ஒன்று நம்மிடமே உள்ளது.

நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை அனைத்திலும் தலா 100 கிராம் எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைத்து இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடவேண்டும்.அதிலிருந்து வடியும் சாறை சேகரித்து இதன் அளவுகேற்ப மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.வெயில்காலத்தில் முடியின் வேர்களில் வியர்த்து அழுக்கு படிந்து நாளடைவில் பொடுகாக மாறிவிடும், இது வந்தாலும் முடி கொட்டும். இந்த பொடுகை போக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.

வெந்தயத் தூள் – 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன். இந்த மூன்றுடன் எலுமிச்சைச் சாறு , நெல்லிக்காய் சாறு இரண்டையும் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை பரவலாக தலை முழுதும் தடவி ஒரு பத்து நிமிடம் கழித்து நன்றாக தேய்த்துக் குளித்து விடுங்கள்.

வெந்தயம் தலைக்கு குளிர்ச்சி கொடுக்கும், கடுக்காயும் கடலைமாவும் தலையை சுத்தப்படுத்தும். பொடுகை நீக்கும். எலுமிச்சை சாறு தலை அரிப்பை போக்கும். நெல்லிக்கையாய் முடியின் வளர்ச்சியை தூண்டும்.

வழுக்கை விழுந்துவிடும் என்ற கவலை இனிமேல் இல்லைவே இல்லை .

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்.

Thursday, March 27, 2014

பாட்டி வைத்தியம்

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.
* சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

Monday, March 24, 2014

நாவல் பழத்தின் மருத்துவக் குணம்..!


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Wednesday, March 19, 2014

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணங்கள்:-

நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர். 

ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் "தண்ணீர் விட்டான்" கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.

வளரியல்பு:

அல்லி குடும்ப (Lilliaceae) தாவரமான "தண்ணீர் விட்டான்" கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும்.

வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும், நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன. முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை.

வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர் தன்மையும் கொண்டவை. வேர்கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன. நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணப்படுகிறது.

வடமொழியில் சதாவரி (Shatavari - A Woman's Best Friend) என்று அழைக்கப்படுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு:-

தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.

மருத்துவ குணங்கள்:-

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது.

தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.

உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.

உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகும்.

பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப் பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.

அழகு தாவரம் தண்ணீர் விட்டன் கிழங்கு.

தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை.

சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்காவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது.

அழகிற்காக வளர்க்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை.

தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு.

இந்த ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி, இடித்து சாறு எடுக்க வேண்டும்.

ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும்.

இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகரிக்கிறது.. .

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ
அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய
சிறு நோய்களில்
இருந்து பாதுகாக்கிறது.. .

பொட்டாசியம் மூளை,
நரம்பு கடத்துகையை சீராக்கிறது.

குருதிச்
சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம்
இருக்கிறது. ஆயினும்,

சமிபாட்டு செயன்முறையால்,
அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின்
அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின்
நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.

மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம்
உண்பவர்கள் மெலிவான
உடல்வாகை கொண்டிருப்பதுநி ருபணமான
உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச்
சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,
சுருக்கங்களைக்க ுறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான
சுவாசம் தருகிறது...

8. நுரையீரல்
தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம்
என்பது தியறி... ஆனால்
நிருபிக்கப்படவி ல்லை.

10. காலையில் டீ
அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட
பழக்கத்தை நீக்குகிறது.

பாட்டி வைத்தியம்:-

1. தும்மல் நீங்க...
வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1/4 தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது பகல் இரவு உணவுடன் பிசைந்து சாப்பிடலாம்.

2. பூச்சிகள் போக...
குடலில் சேரும் பூச்சிகள் வெறியேற வேப்பந்துளிர் 10 எடுத்து வெல்லம் சேர்த்து சாப்பிட, மலத்துடன் அவை வெளியேறும். நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. இளமை நீடிக்க...
சீமை இலந்தைப்பழம் உண்பதற்குச் சுவையாக இருக்கும். தினம் ஐந்து முதல் பத்துப் பழங்களை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இளமை நீடிக்கும். இல்லற சுகம் சோர்வு பெறாது. மகப்பேறு வாய்க்கும்.

4. இரத்த சோகை நீங்க...
வெறும் வயிற்றில் தினம் ஆப்பிள் + மாதுளை சுவைநீர் கலந்து தேன் 2 தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உயரும். இரத்தசோகை நீங்கும். இரத்தப் புற்று நோய் நோயாளிகளுக்கு இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

5. முக்கனி சுவையில்...
மா, பலா, வாழை எனும் தமிழ் கனிகள் முறையே வாத, பித்த, கபநிலைகளைக் கட்டுப்படுத்துபவை ஆகும். இவைகளை உணவில் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் நிலையான உடல் நலத்தைப் பெறலாம்.

6. பலம் தரும் பலா...
பலாக் காயினை துண்டுகளாக்கி உருளைக்கிழங்கு வருவல் போல் செய்துண்ணலாம். காம வேட்கையைத் தூண்டும் ஆற்றல் பலாக்காய்க்கு உண்டு. அதற்காக அன்றாடம் செய்து உண்டால் வாதம், செரிக்காமை, ஆகியன உண்டாகும். மாதமிருமுறை உண்பதே சிறப்பு. போதை நஞ்சுகள் முறியும்.

7. மூல நோய் தணிய...
நாட்டுக் கருணையின் தண்டினைப் பாசிப்பருப்புடன் பொரியலாகச் சமைத்துண்ண இரத்த மூலம், சதை மூலம் தணியும். பசியும் செரிமானமும் நிலைபெறும். மாதம் 1 முறை உண்ணலாம்!

8. நல்லா செரிமானமாக...
தினசரி பகல் உணவில் மட்டுமே சுத்தமான சுக்குப் பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து 1 பிடி சாதத்தில் கலந்து 1/4 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணை விட்டுப் பிசைந்து சாப்பிட அன்றைய உணவு முழுமையாக செரிக்கப்பட்டு, சாரம் இரத்தத்தில் கலக்கும். சக்கை மலக்குடல் வழி வெளியேறும்.

மாரடைப்பும் குடிநீரும் - நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள். விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.

ஏலக்காயின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும். 4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விளகும்.

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

பேஸ்புக்யில் இருந்து கொண்டே சுட சுட செய்திகளை அறிந்துகொள்ள இப்பக்கத்தை LIKE செய்யுங்க! ! ! !

ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்...

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும்.

எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி. ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி.

எலுமிச்சை ஜூஸ்

தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

வெள்ளை சாதத்தை தவிர்க்கவும்

தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்

இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்.

பூண்டு சாப்பிடவும்

தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

அசைவ உணவுகளை தவிர்க்கவும்

வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பழங்களை சாப்பிடவும்

தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.

பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.

காரமான உணவுகளை சாப்பிடவும்

மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும.

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.

நாம் ஒரு முறையை பார்ப்போம்.

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.

இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.