Monday, March 31, 2014

முடிக் கொட்டுவதால் ஏற்படும் வழுக்கைப் பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு

ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை முடி கொட்டுவது. தற்போது பலருக்கும் இளம் வயதிலேயே முடி கொட்டி தலை வழுக்கை விழுந்துவிடுவதால் அதிக மன உளைச்சல் அடைகிறார்கள். இவ்வாறு கொட்டுகிறதே என கவலைபடுவதால் இன்னும் அதிகமாக கொட்டும்.

இதை சரி செய்வது எவ்வாறு என முயற்சி எடுப்பது நல்லது. மார்கெட்டில் விற்கும் பலவித எண்ணைகளையும். மூலிகை என்ற பெயரால் விற்கபடுவதையும் வாங்கி தேய்ப்பதை விட எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத சிறந்த தீர்வு ஒன்று நம்மிடமே உள்ளது.

நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை அனைத்திலும் தலா 100 கிராம் எடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைத்து இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடவேண்டும்.அதிலிருந்து வடியும் சாறை சேகரித்து இதன் அளவுகேற்ப மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.வெயில்காலத்தில் முடியின் வேர்களில் வியர்த்து அழுக்கு படிந்து நாளடைவில் பொடுகாக மாறிவிடும், இது வந்தாலும் முடி கொட்டும். இந்த பொடுகை போக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.

வெந்தயத் தூள் – 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன். இந்த மூன்றுடன் எலுமிச்சைச் சாறு , நெல்லிக்காய் சாறு இரண்டையும் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை பரவலாக தலை முழுதும் தடவி ஒரு பத்து நிமிடம் கழித்து நன்றாக தேய்த்துக் குளித்து விடுங்கள்.

வெந்தயம் தலைக்கு குளிர்ச்சி கொடுக்கும், கடுக்காயும் கடலைமாவும் தலையை சுத்தப்படுத்தும். பொடுகை நீக்கும். எலுமிச்சை சாறு தலை அரிப்பை போக்கும். நெல்லிக்கையாய் முடியின் வளர்ச்சியை தூண்டும்.

வழுக்கை விழுந்துவிடும் என்ற கவலை இனிமேல் இல்லைவே இல்லை .

No comments:

Post a Comment